/* */

அத்தாணி அருகே வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு

அத்தாணி அருகே உள்ள வரப்பள்ளத்தில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

அத்தாணி அருகே வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த பங்களாப்புதூர் அருகே அத்தாணி-சத்தியமங்கலம் சாலையில் பெருமுகை ஊராட்சி வரப்பள்ளம் என்ற இடத்தில் நேற்று அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் ஒருவருக்கு வலது கை மற்றும் வலது மார்பில் அடிபட்டு இரத்த காயத்துடன் இருந்தவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்தோர் கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் விபத்துக்குள்ளான முதியவர் அத்தாணி முனியப்பன் கோயில் பகுதியை சேர்ந்த முனியன் (எ) கென்னடி (69) என்பதும் அவர் அத்தாணி அருகே உள்ள வரப்பள்ளம் என்ற இடத்தில் நடந்து வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விபத்துக்குள்ளானது தெரியவந்தது.

இதனையடுத்து கோபி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதியவர் கென்னடி மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்ததை அடுத்து உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுஇச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதோடு விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.

Updated On: 29 May 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு