சத்தியமங்கலம் அருகே கே.என்.பாளையத்தில் சுகாதார ஆய்வாளர் வீட்டில் அதிகாரிகள் சோதனை

மருத்துவம் பார்த்ததாக வலைத்தளங்களில் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சத்தியமங்கலம் அருகே கே.என்.பாளையத்தில் உள்ள சுகாதார ஆய்வாளர் வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கே.என்.பாளையம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 57). இவர் சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சைபுளியம்பட்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், இவர் உரிய மருத்துவம் படிக்காமல் ஊசி மருந்து, மாத்திரைகளை பயன்படுத்தி தனது வீட்டில் வைத்து மருத்துவம் பார்த்து வருவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது. இதுகுறித்து உக்கரம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை டாக்டர் பிரபாவதிக்கு தகவல் சென்றது.
அதன்பேரில், அவர் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவுடன் வருவாய்த்துறையினர் மற்றும் பங்களாப்புதூர் போலீசார் ஜெய்சங்கர் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். இதில் எந்த மருத்துவ உபகரணங்களும் வீட்டில் கைப்பற்றப்படவில்லை. இதைத்தொடர்ந்து, ஜெய்சங்கரிடம் நடத்திய விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காயமடைந்த நிலையில் முதலுதவி கேட்டு ஒரு நபர் வந்தார்.
அவர் கேட்டு கொண்டதன் பேரில், மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு ஊசி மருந்து செலுத்தி அனுப்பினேன் மருத்துவம் பார்க்கவில்லை என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, இதுகுறித்து மருத்துவ உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டதாக ஆய்வு குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu