கோபிசெட்டிபாளையம் அருகே நர்சிங் கல்லூரி மாணவி மாயம்

கோபிசெட்டிபாளையம் அருகே நர்சிங் கல்லூரி மாணவி மாயம்
X

பைல் படம்

கோபிசெட்டிபாளையம் அருகே நர்சிங் கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் உப்பு கிடங்கு வீதியை சேர்ந்தவர் முருகேசன். கூலித்தொழிலாளியான இவரது மகள் கிருத்திகா ஒத்தக்குதிரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், நர்சிங் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த நேற்று முன்தினம் கன்னிகம்மாள் என்பவரின் வீட்டில் இருந்த கிருத்திகா திடீரென மாயனார். பல இடங்களிலும் தேடி பார்த்தும் கிடைக்காத நிலையில், முருகேசன் அளித்த புகாரின்பேரில் கோபிசெட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!