ஈரோடு மாவட்டத்தில் நாளை (19ம் தேதி) மின்நிறுத்த பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (19ம் தேதி) மின்நிறுத்த பகுதிகள் அறிவிப்பு
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் கொடுமுடி, பெரியாண்டிபாளையம், சிப்காட் பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) கொடுமுடி துணை மின் நிலையத்தில் உள்ள பி.கே.பாளையம் மின்பாதை, பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையம், சிப்காட் துணை மின் நிலையம் ஆகிய துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின் தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

* கொடுமுடி துணை மின் நிலையத்தில் உள்ள பி.கே. பாளையம் மின் பாதையில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது. மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:- சென்னசமுத்திர மாரியம்மன் கோவில் பகுதி, பிலிக்கல்பாளையம், நகப்பாளையம், பில்லாகவுண்டன்புதூர், நல்லகவுண்டன்புதூர், சாமிநாதபுரம்

* பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது. மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:- பெருந்துறை கோட்டத்தை சேர்ந்த ஊத்துக்குளிரோடு, மேலப்பாளையம், பள்ளக்காட்டுப்புதூர், பனியம்பள்ளி, தொட்டம்பட்டி, வாய்ப்பாடிபுதூர், கவுண்டம்பாளையம், மாடுகட்டிபாளையம், எளையாம்பாளையம், துலுக்கம்பாளையம் மற்றும் பழனி ஆண்டவர் ஸ்டீல்ஸ்

* இதேபோல், சிப்காட் துணை மின் நிலையத்திலும் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:- சிப்காட் வளாகம் தெற்கு பகுதி, கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புளியம்பாளையம், காசிபில்லாம்பாளையம்

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு