ஈரோடு மாவட்டத்தில் மருத்துவ துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை

ஈரோடு மாவட்டத்தில் மருத்துவ துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை
X

ஒப்பந்த பணி குறித்து  வெளியாகியுள்ள அறிவிப்பு.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் துணை இயக்குநர் , சுகாதாரப்பணிகள் அலுவலகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்பட்டு வரும் கீழ்கண்ட திட்டங்களில் ஒப்படைக்கப்பட்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் 19.01.2022 மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பங்கள்‌ நேரிலோ / விரைவு தபால்‌ மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும். தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். 19.01.2022 அன்று மாலை 5.00 மணிக்கு மேல்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைக்கான விவரங்கள் :

1. District Consultant / காலிப்பணியிடங்கள் - 01 , ஊதியம் - 35,000/- , கல்வித்தகுதி - அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/பல்கலைக்கழகத்தில் இருந்து பொது சுகாதாரம் அல்லது சமூக அறிவியல் அல்லது மேலாண்மை அல்லது தொடர்புடைய துறையில் முதுகலை பட்டதாரி அல்லது குறைந்தபட்சம் 2 வருட அனுபவத்துடன் MBBS/BDS விண்ணப்பதாரர்கள்

2. Social Worker / காலிப்பணியிடங்கள் - 01 , ஊதியம் - 13,000/- , கல்வித்தகுதி - சமூகவியல்/ சமூகப்பணியில் பட்டதாரி பட்டம் அல்லது சமூகவியலில் பட்டதாரி/சமூக சேவகர் பட்டம் மற்றும் 2 வருட அனுபவம்.

3. Data Entry Operator / காலிப்பணியிடங்கள் - 01 , ஊதியம் - 10,000/- , கல்வித்தகுதி - கணினியுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு 35 ஆண்டுகள் (தமிழ் / ஆங்கிலம் தட்டச்சு) திருத்தம் (10, +2) மற்றும் கம்ப்யூட்டர் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் தொடர்புடைய பணி அனுபவம்

4. Refrigeration Mechanic / காலிப்பணியிடங்கள் ‌‌-01 , ஊதியம் - 20,000/- , கல்வித்தகுதி - ஐடிஐ சான்றிதழ் மெக்கானிக்-இன் ரெஃப்ரிஜரேஷன் ஏர்-கண்டிஷனிங் (எம்ஆர்ஏசி) குளிர்பதன மற்றும் ஏர் கண்டிஷனிங்கில் ஒரு வருட அனுபவம்

5. Multi Purpose Worker / காலிப்பணியிடங்கள் - 05 , ஊதியம் - 8,500/- , கல்வித்தகுதி - 8-ம் வகுப்பு பாஸ். படிக்கவும் எழுதவும் தெரிய வேண்டும்.

6. ANM / காலிப்பணியிடங்கள் - 03 , ஊதியம் - 14,000/- , கல்வித்தகுதி - இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஏஎன்எம் பள்ளிக்கான ANM தகுதிச் சான்றிதழ் மற்றும் TN செவிலியர்கள் மற்றும் மருத்துவ கவுன்சில் வழங்கிய பதிவுச் சான்றிதழ்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பங்கள்‌ நேரிலோ / விரைவு தபால்‌ (Speed Post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.விண்ணப்ப படிவங்களை ஈரோடு மாவட்ட அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ நேரில்‌ பெற்று கொள்ளலாம்‌. விண்ணப்ப படிவத்துடன்‌ இப்பதவிக்குரிய அனைத்து சான்றிதழ்களையும்‌ ( Self Attested) சுயசான்றொப்பம்‌ செய்யப்பட்ட நகல்கள்‌ இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்‌.19.01.2022 அன்று மாலை 5.00 மணிக்கு மேல்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

நிபந்தனைகள்‌:

இந்த பதவி முற்றிலும்‌ தற்காலிகமானது.எந்த ஒரு காலத்திலும்‌ பணி நிரந்தரம்‌ செய்யப்படமாட்டாது.பணியில்‌ சேருவதற்கான மேற்கண்ட நிபந்தனைக்கு கட்டுப்பட்டு ஒப்புதல்‌ கடிதம்‌ அளிக்க வேண்டும்‌. விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :நிர்வாக செயலாளர் /துணை இயக்குநர் சுகாதார பணிகள் , மாவட்ட நல்வாழ்வு சங்கம் , திண்டல் , ஈரோடு மாவட்டம் , ஈரோடு - 638012. தொலைபேசி எண் : 0424 2431020

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!