ஈரோடு: ஓடும் ரயிலில் வங்கி பெண் உதவி மேலாளருக்கு பாலியல் தொல்லை; வடமாநில தொழிலாளி கைது

ஈரோடு: ஓடும் ரயிலில் வங்கி பெண் உதவி மேலாளருக்கு பாலியல் தொல்லை; வடமாநில தொழிலாளி கைது
X

கைது செய்யப்பட்ட மதாப் சர்கர்.

ஈரோடு அருகே ஓடும் ரயிலில் வங்கி பெண் உதவி மேலாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

ஈரோடு அருகே ஓடும் ரயிலில் வங்கி பெண் உதவி மேலாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க திருமணமான பெண். சேலத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 8ம் தேதி இரவு சேலத்தில் இருந்து திருச்சூர் செல்வதற்காக புனே- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார்.

அந்த ரயில் ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து திருப்பூரை நோக்கி ரயில் புறப்பட்டது. சிறிது நேரத்தில் ரயில் சென்று கொண்டிருந்தபோது அருகில் உள்ள இருக்கையில் பயணம் செய்த வாலிபர் ஒருவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதுகுறித்து அந்த பெண் ஈரோடு ரயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர், மேற்கு வங்காள மாநிலம் நதியா மாவட்டம் திகல்கண்டி பகுதியை சேர்ந்த மதாப் சர்கர் (வயது 33) என்பதும், கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மதாப் சர்கரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

ஈரோடு, நாமக்கல் மாவட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள். நமது குழுவில் இணையுங்கள். Click Now

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது