வட மாநில வாலிபர் மயங்கி விழுந்து சாவு

வட மாநில வாலிபர் மயங்கி விழுந்து சாவு
X

பைல் படம்.

சித்தோடு அருகே வடமாநில வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்அரிஜன் (வயது 37). இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் சித்தோடு பாரதி நகர் பகுதியில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தார். அதே பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாலகிருஷ்ணன் அரிஜனுக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தொடர்ந்து அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இதனையடுத்து வீட்டில் இருந்தவர்கள் வேலைக்கு சென்று விட்டனர். இந்நிலையில், வீட்டின் முன்பு பாலகிருஷ்ணன் அரிஜன் திடீரென மயங்கி விழுந்தார். இதை கண்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சித்தோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடல் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!