அதிமுக பாஜக இடையே முரண்பாடுகள் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

அதிமுக பாஜக இடையே முரண்பாடுகள் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
X

ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.

நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அண்ணா திமுக மகத்தான வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சரும் ஈரோடு கிழக்கு புறநகர் மாவட்ட செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சரும் ஈரோடு கிழக்கு புறநகர் மாவட்ட செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோட்டில் அதிமுக அலுவலகத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கிய பின் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, 2024 தேர்தல் திருப்பு முனையாக அமையும். 2026 தேர்தலில் அசைக்க முடியாத சக்தியாக அதிமுக ஆட்சி அமைக்கும். டெல்டா பகுதி வேளாண் சிறப்பு மண்டலமாக அண்ணா திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு பாதுகாப்பான அரசாக அதிமுக இருந்தது. பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் பங்கேற்காதது குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப உள்ளேன்.

கூட்டணி குறித்து நாங்கள் தெளிவாக உள்ளோம். அதிமுக பாஜக இடையே முரண்பாடுகள் இல்லை. நேர சூழல் காரணமாக பிரதமர்- ஈபிஎஸ் சந்திப்பு நடைபெறவில்லை. இவ்வாறு கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். பேட்டியின் போது, ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் செல்வகுமார சின்னையன், ஈரோடு மாநகர் பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், சூரம்பட்டி ஜெகதீஷ், கேசவமூர்த்தி, ஜெயராஜ் (எ) முனுசாமி, கோவிந்தராஜ், தங்கமுத்து, முருகசேகர், ராமசாமி, மாவட்ட துணைச் செயலாளர் ஜெயலட்சுமி மோகன், மாவட்ட இணைச் செயலாளர் பாப்பாத்தி மணி, ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவரும் கொடுமுடி ஒன்றிய செயலாளருமான புதூர் கலைமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!