ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பார்வையாளராக நிஷாந்த் கிருஷ்ணா பொறுப்பேற்பு

ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பார்வையாளராக நிஷாந்த் கிருஷ்ணா பொறுப்பேற்பு
X
ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை கண்காணிக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் தேர்தல் பார்வையாளராக நியமனம் செய்யப்பட்ட நிஷாந்த் கிருஷ்ணா‌ நேற்று ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பார்வையாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணியுடன் தேர்தல் பார்வையாளர் நிஷாந்த் கிருஷ்ணா நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக புகார் தெரிவிப்பவர்கள் தேர்தல் பார்வையாளரின் கைபேசி எண் 8807600787-க்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும், தேர்தல் தொடர்பாக புகார் அளிக்க ஏற்கனவே செயல்பட்டுவரும் இலவச தொலைபேசி எண்கள், மாநகராட்சி - 180042594890, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் - 18004250424என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!