ஈரோடு மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சுஜாதா பொறுப்பேற்பு

ஈரோடு மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சுஜாதா பொறுப்பேற்பு
X
ஈரோடு மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக ஏ.சுஜாதா இன்று (மார்ச் 28) பொறுப்பேற்றுக் கொண்டார்.;

ஈரோடு மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக ஏ.சுஜாதா இன்று (மார்ச் 28) பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஜி.ஜவகர் சிபிசிஐடி வடக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவருக்கு பதிலாக திருப்பூர் சட்டம்- ஒழுங்கு ஆணையாளராக பணியாற்றி வந்த ஏ.சுஜாதா நியமிக்கப்பட்டார். இவர், இன்று (மார்ச் 28) ஈரோடு மாவட்டத்தின் 30வது காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற சுஜாதாவுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த போலீசார் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story