அம்மாபேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் 14 புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு

அம்மாபேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் 14 புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு
X

அம்மாபேட்டை பேரூராட்சி அலுவலகத்தில்  பதவியேற்றுக்கொண்ட புதியஉறுப்பினர்கள்

அம்மாபேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் 14 புதிய உறுப்பினர்கள் பதவியேற்று கொண்டனர்

நகர்ப்புற தேர்தலில் அம்மாபேட்டை ஒன்றியத்தில் உள்ள அம்மாபேட்டை நெருஞ்சிப்பேட்டை ஆகிய 2 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்று புதிய உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.தேர்வு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா அந்தந்த பேரூராட்சிகளில் செயல் அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அம்மாபேட்டையில் தேர்தல் நடைபெறும் முன்பு இரண்டாவது வார்டு வேட்பாளர் இறந்ததை அடுத்து அங்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதுஅதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட 14 உறுப்பினர்கள் அம்மாபேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். அதேபோல் நெருஞ்சிப்பேட்டை பேரூராட்சியில் 15-வார்டு உறுப்பினர்களும் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

இதனையடுத்து அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் சரவணன் வடக்கு மாவட்ட துணை செயலாளர் . அறிவானந்தம் மாநில பொதுக்குழு உறுப்பினர் சம்பத் குமார் , ,மாவட்ட கவுன்சிலர் சதாசிவம் , அம்மாபேட்டை பேரூராட்சி செயலாளர் பெரிய நாயகம் , நெருஞ்சிப்பேட்டை பேரூர் கழகச் செயலாளர் கண்ணன் , ஊராட்சி மன்ற தலைவர்கள் ஈஸ்வரமூர்த்தி அவர்கள் அசோக் குமார் , மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள், மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் பதவியேறற கவுன்சிலர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளை கூறினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!