ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நாளை நீட் தேர்வு

நீட் தேர்வு.
ஈரோடு மாவட்டத்தில் எட்டு தேர்வு மையங்களில் நீட் தேர்வு நாளை நடக்க உள்ளது.
நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை, ஒவ்வொரு நீட் நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. அந்தவகையில், 2024-25ம் கல்வியாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு, நாளை (மே 5ம் தேதி) நடைபெறுகிறது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு பிப்ரவரி 9ம் தேதி முதல் ஏப்ரல் 10ம் தேதி வரை நடைபெற்றது. தேர்வை 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள். தமிழகத்தில் 1.50 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்வானது, நாடு முழுவதும் 557 நகரங்களில் நடைபெறுகிறது
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடக்க உள்ளது. இத்தேர்வானது, பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை (3 மணி 20 நிமிடம்) நடைபெறுகிறது. இதில் 4 ஆயிரத்து 700 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்வு நடைபெறும் மையம் குறித்த விவரங்களை https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu