ஈரோடு மாவட்டத்தில் இன்று 7 மையங்களில் நீட் தேர்வு
பைல் படம்
இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் 2022-2023-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு (நீட்) இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இந்த தேர்வுக்காக ஈரோடு மாவட்டத்தில் லயன்ஸ் மேல்நிலைப்பள்ளி,-அவல்பூந்துறை , நந்தா கலை அறிவியல் கல்லூரி , கீதாஞ்சலி மேல்நிலைப்பள்ளி-திண்டல் , ஸ்ரீவெங்கடேஸ்வரா ஹை-டெக் என்ஜினீயரிங் கல்லூரி, நந்தா சென்ட்ரல் பள்ளி , தி இந்தியன் பப்ளிக் பள்ளி , கோபி கலை அறிவியல் கல்லூரி என 7 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த மையங்களில் மாவட்டம் முழுவதும் இருந்து மொத்தம் 4,896 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கும் தேர்வு மாலை 5 மணிக்கு முடிவடைகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu