தமிழகத்தில் இந்து இயக்க தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்

தமிழகத்தில் இந்து இயக்க தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்
X

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கா.சி.முருகேசன்.

இந்து இயக்க தலைவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் மாநிலச்செயலாளர் கா.சி.முருகேசன் கூறியுள்ளார்.

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கா.சி.முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னையில் நேற்று இரவு இந்து மக்கள் கட்சியின் முன்னாள் மாநில இளைஞரணி பொதுச்செயலாளரும், பாஜக பட்டியலின பிரிவு மாவட்ட தலைவருமான பாலசந்தர் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த செயலை இந்து மக்கள் கட்சியின் வன்மையாக கண்டிக்கிறது. பாலசந்தர் தேசப்பற்று மிக்கவர்.

போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த போதும் கூட அவரை திட்டமிட்டு வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் எங்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை தமிழக அரசு கைது செய்து, தண்டனை பெற்று தரவேண்டும். மேலும், திமுக அரசு இந்து இயக்க தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
ai in future agriculture