கோபி அருகே ஐ.டி. நிறுவன ஊழியருக்கு கத்தி குத்து

கோபி அருகே ஐ.டி. நிறுவன ஊழியருக்கு கத்தி குத்து
X

ஐ.டி. நிறுவன ஊழியரை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட சசிக்குமார்.

கோபிசெட்டிபாளையம் அருகே ஐ.டி. நிறுவன ஊழியரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவர் பெங்களூரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் தர்மலிங்கம், புதியதாக வீடு கட்டும் பணியை பக்கத்து வீட்டை சேர்ந்த செல்வன் என்ற கட்டிட மேஸ்திரியிடம் ஒப்படைத்தார். செல்வன் சரிவர வேலை செய்யாத நிலையில் வேறு ஒருவரை வைத்து கட்டிட பணிகளை முடித்து கொண்டார்.

இது தொடர்பாக தர்மலிங்கத்திற்கும், செல்வத்திற்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் தர்மலிங்கம், வீட்டின் அருகே நின்று கொண்டு இருந்தபோது அங்கு வந்த செல்வனின் மகன் சசிக்குமார், தர்மலிங்கத்திடம் தகராறு செய்ததுடன், கத்தியால் குத்தி உள்ளார். இதில் காயமடைந்த தர்மலிங்கம் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து தர்மலிங்கம் அளித்த புகாரின்பேரில் கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு