ஈரோட்டில் 15வது பட்டாலியன் என்சிசி ஆண்டுப் பயிற்சி முகாம்

ஈரோட்டில் 15வது பட்டாலியன் என்சிசி ஆண்டுப் பயிற்சி முகாம்
X

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை முகாம் தலைமை அதிகாரி கர்னல் அஜய் குட்டின்கோ,உதவி முகாம் அலுவலர் லெப்டினன்ட் கர்னல் கோபால் கிருஷ்ணா மற்றும் கல்லூரி முதல்வர் வாசுதேவன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்த போது எடுத்த படம்.

15 தமிழ்நாடு பட்டாலியன் சார்பில் ஆண்டுப் பயிற்சி முகாம் கடந்த 15ம் தேதி முதல் தொடங்கி ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

15 தமிழ்நாடு பட்டாலியன் சார்பில் ஆண்டுப் பயிற்சி முகாம் கடந்த 15ம் தேதி முதல் தொடங்கி ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

உடல் வலிமையும் உள்ளத்தில் உறுதியும் உள்ள இளைஞர்களால் மட்டுமே ஒரு நாடு வளர்ச்சிப் பாதையை நோக்கி வேகமாக வளர்ந்திட முடியும். இந்திய நாட்டின் இளைஞர்களைச் சிறப்பாக வழிநடத்தி நாட்டின் பாதுகாப்பையும் ஒற்றுமையையும் வளர்த்தெடுக்க உருவாக்கப்பட்ட அமைப்பே தேசிய மாணவர் படை அமைப்பாகும்.

உலகெங்கிலும் உள்ள அமைப்புகளில் மிகப்பெரிய எண்ணிக்கை கொண்ட அமைப்பாக இந்திய நாட்டின் தேசிய மாணவர் படை அமைந்துள்ளது. இவ்வமைப்பின் மூலம் காஷ்மீர் மாநிலம் முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு விதமான ராணுவம் தொடர்பான சிறப்பு பயிற்சிகள் வழங்கி அவர்களை நாட்டின் சிறந்த குடிமக்களாக உருவாக்கி வருகிறது.


அவ்வகையில் தமிழ்நாடு பாண்டிச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகள் பிரிவின் கோவை மண்டல அமைப்பின் கீழ், ஈரோட்டில் 15 தமிழ்நாடு பட்டாலியன் என்சிசி அமைப்பு ராணுவ அதிகாரி கர்னல் அஜய் குட்டின்கோ தலைமையிலும், லெப்டினன்ட் கர்னல் கோபால்கிருஷ்ணா நிர்வாகத்திலும் இயங்கி வருகிறது.

15 தமிழ்நாடு பட்டாலியின் சார்பில் ஆண்டுப் பயிற்சி முகாம் கடந்த 15ம் தேதி தொடங்கி 24ம் தேதி (நாளை) வரை கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. மாணவர்களுக்கு காலை 6 மணி முதல் 7 மணி வரை பல்வேறு உடற்பயிற்சி வகுப்புகளும் 9 மணி முதல் 12.30 மணி வரை அணி பயிற்சி, வரைபடப்பயிற்சி, துப்பாக்கி சுடும் பயிற்சி, ஆளுமைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற இராணுவம் தொடர்பான பல்வேறு பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.


ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த பல்வேறு பள்ளி கல்லூரிகளைச் சேர்ந்த 360 மாணவ மாணவிகள் கல்லூரியில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். கடந்த 20,21 ஆகிய தேதிகளில் முகாம் மாணவர்களுக்கு கொங்கு பொறியியல் கல்லூரியில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட்டது.

முகாமில் பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றது.அவற்றில் சிறந்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 23ம் தேதி காலை 9 மணிக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை முகாம் தலைமை அதிகாரி கர்னல் அஜய் குட்டின்கோ, உதவி முகாம் அலுவலர் லெப்டினன்ட் கர்னல் கோபால் கிருஷ்ணா மற்றும் கல்லூரி முதல்வர் வாசுதேவன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.


முன்னதாக, மாணவர்களுக்கு போதைப் பொருள் விழிப்புணர்வு பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளி கல்லூரிகளைச் சேர்ந்த பல்வேறு மாணவர்கள் பங்கேற்று போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்து சிறப்புரையாற்றினர். போதை தடுப்பு விழிப்புணர்வு பற்றிய உறுதிமொழிகளை மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர். ஊர்வலம் கல்லூரியில் தொடங்கி வேப்பம்பாளையம் முக்கிய சாலைகள் வழியாகச் சென்று மீண்டும் கல்லூரியில் நிறைவடைந்தது.

ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை கல்லூரி என்சிசி அதிகாரி கேப்டன் கார்த்திகேயன் மற்றும் முகாம் உதவி பொறுப்பு அதிகாரி மைதிலி மற்றும் பல்வேறு கல்லூரி, பள்ளிகளைச் சேர்ந்த என்சிசி அதிகாரிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story