பவானிக்கு தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படை வருகை

பவானிக்கு தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படை வருகை
X

காவிரியில் வெள்ளம் ஏற்பட்டதால், பவானியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் முகாமிட்டுள்ளனர்.

National Disaster Response Force -காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், பவானியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், நவீன கருவிகளுடன் முகாமிட்டுள்ளனர்.

National Disaster Response Force -காவிரி கரையோர பகுதிகளில் வெள்ள அபாயம் தொடர்ந்து நீடித்து வருவதால், ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சி பகுதியில் தேசிய பேரிடர் மேலாண்மை படை குழுவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட சிறப்புப் பயிற்சி பெற்ற வீரர்கள், அரக்கோணம் 4-வது பிரிவின் எஸ்ஐ பரேவா தலைமையில் முகாமிட்டுள்ளனர்.

இவர்கள், நேற்று பிற்பகலில் கொட்டும் மழையில் காவிரி கரையோரப் பகுதிகளை, ஆய்வு செய்தனர். அவசர கால உயிர் காக்கும் கருவிகள் மற்றும் மீட்பு உபகரணங்களுடன் இவர்கள், பவானியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.





அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!