'நம்ம அந்தியூர்' வரவேற்பு சின்னத்தை திறந்து வைத்த எம்எல்ஏ வெங்கடாசலம்..!

நம்ம அந்தியூர் வரவேற்பு சின்னத்தை திறந்து வைத்த எம்எல்ஏ வெங்கடாசலம்..!
X

நம்ம அந்தியூர் வரவேற்பு சின்னத்தை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்த போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் எதிரிலுள்ள ரவுண்டானாவில் நம்ம அந்தியூர் என்ற வரவேற்பு சின்னத்தை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் இன்று (30ம் தேதி) திறந்து வைத்தார்.

Erode Today News, Erode News, Erode Live News - அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் எதிரிலுள்ள ரவுண்டானாவில் நம்ம அந்தியூர் என்ற வரவேற்பு சின்னத்தை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் இன்று (30ம் தேதி) திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பத்ரகாளியம்மன் கோவில் எதிரிலுள்ள ரவுண்டானாவில் அந்தியூர் மீதான காதலை வெளிப்படுத்தும் வகையில், ஐ லவ் அந்தியூர் என்ற வரவேற்பு சின்னம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.


இந்நிலையில் , அதற்கான பணிகள் முடிவடைந்து நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட நம்ம அந்தியூர் என்னும் பேரூராட்சியின் வரவேற்பு சின்னத்தை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் இன்று (30ம் தேதி) ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், அந்தியூர் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள், துணைத் தலைவர் பழனிச்சாமி, செயல் அலுவலர் ரமேஷ், துப்புரவு ஆய்வாளர் குணசேகரன் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


இறுதியில் அனைவரும் நம்ம அந்தியூர் வரவேற்பு சின்னத்தின் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!