கோபிசெட்டிபாளையம் அருகே மயில்கள் மர்ம உயிரிழப்பு:- வனத்துறையினர் விசாரணை

கோபிசெட்டிபாளையம் அருகே மயில்கள் மர்ம உயிரிழப்பு:- வனத்துறையினர் விசாரணை
X

இறந்து கிடந்த மயில்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தகுதிரை பகுதியில் மர்மமான முறையில் 7 மயில்கள் உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தகுதிரை கே.மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில், மர்மமான முறையில் மயில்கள் இறந்த கிடப்பதாக அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் அங்கு சென்று வனத்துறையினர் பார்த்தபோது, 7 மயில்கள் இறந்து கிடந்தன. வனத்துறையினர் இறந்து கிடந்த மயில்களை சோதனை செய்தனர்.

அதில் 7 மயில்களும் விஷம் காரணமாகவே உயிரிழந்து இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, மயில்களுக்கு விஷம் வைத்து கொன்றது யார் என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு