பங்களாப்புதூர் அருகே மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலி

பங்களாப்புதூர் அருகே மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலி
X

கண்காணிப்பு கேமரா பொருத்திய போது எடுத்த படம்.

பங்களாப்புதூர் அருகே மேய்ச்சலுக்கு தோட்டத்தில் கட்டி வைத்த 3 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து கொன்றது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பங்களாப்புதூர் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் தனது தோட்டத்தில், 3 ஆடுகளை மேய்ச்சலுக்கு கட்டி வைத்துவிட்டு சென்றுள்ளார். பின்னர், சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, 3 ஆடுகளும் இறந்து கிடந்தன. இதுகுறித்து தகலவறிந்த டி.என்.,பாளையம் வனத்துறையினர் ஆடுகளை கடித்து கொன்ற பகுதியில், மர்ம விலங்கின் கால் தடம் பதிவாகி இருந்தது. அதை பதிவு செய்தனர். மேலும் அப்பகுதியில் ஐந்து இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!