/* */

கீழ்வாணி டி.ஆர்.காலனி முத்துமாரியம்மன் கோயிலில் நாளை பொங்கல் விழா

கீழ்வாணி டி.ஆர்.காலனி முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழா நாளை (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.

HIGHLIGHTS

கீழ்வாணி டி.ஆர்.காலனி முத்துமாரியம்மன் கோயிலில் நாளை பொங்கல் விழா
X

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் முத்துமாரியம்மன்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கீழ்வாணி டி.ஆர்.காலனியில் உள்ள கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழா கடந்த வாரம் 17ம் தேதி கணபதி ஹோமத்துடன் பூச்சாட்டுதல் துவங்கியது .இதனைத்தொடர்ந்து 18ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து கம்பத்துக்கு பக்தர்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டனர். தொடர்ந்து, 19ம் தேதி கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.அதனைத்தொடர்ந்து, விழா நாட்களின் போது தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் விழா நாளை 26ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

காலை 5 மணிக்கு பவானி ஆற்றில் தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு அம்மை அழைத்தல் நிகழ்ச்சியும் மற்றும் இரவு 8 மணிக்கு பெரும் பூஜை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.இதனையடுத்து, நாளை மறுநாள் 27ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு கம்பம் பிடுங்குதல் மற்றும் மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளன. வரும் 28ம் தேதி சனிக்கிழமை பொங்கல் விழாவையொட்டி டி.ஆர்.காலனி அனைத்து மகளிர் சுய உதவிக் குழுவினர் சார்பில், அன்னதானம் வழங்கப்படவுள்ளது. இத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

Updated On: 24 May 2022 7:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!