ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சி 5வது வார்டு சுயேட்சை வேட்பாளர் மாயம்

ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சி 5வது வார்டு சுயேட்சை வேட்பாளர் மாயம்
X

மாயமான வேட்பாளர் முருகேசன்.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சி 5வது வார்டு சுயேட்சை வேட்பாளர் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள புதுக்காலனி ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 47). இவர் நம்பியூர் பேரூராட்சி 5-வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். நேற்று மாலை தேர்தல் முடிந்த பின்பு வாக்குப்பதிவு மையத்தின் முன்பு தனது ஆதரவாளர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார்.

பின்னர் முருகேசன் தனது ஆதரவாளரிடம் நம்பியூர் வரை சென்று வருவதாக கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் பறப்பட்டு சென்றவர், நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. இதுகுறித்து, ஆதரவாளர் முருகேசனின் மனைவியான லலிதாவிடம் கூறியுள்ளார். லலிதா மற்றும் அவர்களின் உறவினர்கள் பல இடங்களிலும் தேடி கிடைக்கவில்லை. இதுகுறித்து, லலிதா அளித்த புகாரின் பேரில் நம்பியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai automation in agriculture