எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் கல்லூரியில் ஆசிரியர் தின விழா

எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் கல்லூரியில் ஆசிரியர் தின விழா
X

ஆசிரியர் தின விழா எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. 

எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா செவ்வாய்க்கிழமை (இன்று) கொண்டாடப்பட்டது.

எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா செவ்வாய்க்கிழமை (இன்று) கொண்டாடப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கல்லூரி வளாகத்தில் உள்ள சுத்தானந்தன் அரங்கில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு, கல்லூரியின் தாளாளர் “பாரத் வித்யா சிரோமணி" டாக்டர். வசந்தா சுத்தானந்தன் தலைமை தாங்கி பேசுகையில் அனைத்து ஆசிரிய ஆசிரியைகளுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்து, மற்ற துறைகளில் பணிபுரிபவர்களைக் காட்டிலும் ஆசிரியர் பணியிலிருப்பது எவ்வளவு உயர்வு என்றும், ஆசிரியர்கள் எவ்வாறு தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இவ்விழாவில் கல்லூரியின் ஆலோசகர் தெய்வசிகாமணி பேசுகையில் டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மாணவர்களை ஊக்கப்படுத்தி எவ்வாறு சிறந்த மாணவர்களை உருவாக்கினார் என்பதை மிக சிறப்பாக எடுத்துரைத்தார். கல்லூரி முதல்வர் ரமேஷ் ஆசிரியர்கள் மாணவ - மாணவிகளுக்கு அவர்களின் பாடங்கள் புரியும் வகையில் தெளிவாக விளக்கி அவர்களின் ஐயங்களை தீர்த்து வைப்பதன் மூலம் அவர்கள் எளிதில் புரிந்து கொண்டு அதிக மதிப்பெண்கள் பெற வழிவகை செய்யும் என்று கூறினார்.

ஆசிரியர்கள் தங்களின் தனித்திறன்களை மேன் மேலும் வளர்த்துக் கொண்டும், அன்றாட நிகழ்வுகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் அனைத்து ஆசிரிய, ஆசிரியைகளுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை கூறினார். விழாவில், மின்னியல் மற்றும் தொலைத்தொடர்பியல் துறைத் தலைவர் மோகன் அனைத்து ஆசிரியர்களையும் வரவேற்று பேசினார். விழாவின் நிறைவாக பேராசிரியை பிருந்தா நன்றியுரை ஆற்றினார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil