சென்னிமலை பேரூராட்சியில் பெண்களுக்கு அதிக வார்டுகள் ஒதுக்கீடு

சென்னிமலை பேரூராட்சியில் பெண்களுக்கு அதிக வார்டுகள் ஒதுக்கீடு
X

பைல் படம்

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: சென்னிமலை பேரூராட்சியில் 15 வார்டுகளில் 8 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகள் வரையறுக்கப்பட்டு பெண்களுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்படி, சென்னிமலை பேரூராட்சியில் 15 வார்டுகளில் 8 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொது பிரிவினருக்கு 7 வார்டுகளும், பெண்களுக்கு 8 வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1-வது வார்டு, 2-வது வார்டு, 5-வது வார்டு, 10-வது, 14-வது வார்டு, 15-வது வார்டு ஆகிய வார்டுகள் பொது வார்டாகவும், 3-வது வார்டு, 4-வது வார்டு, 6-வது வார்டு, 7-வது வார்டு, 8-வது வார்டு, 9-வது வார்டு, 12-வது வார்டு, 13-வது வார்டு ஆகியவை பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
பிளாஸ்டிக் பைகள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி..!