கோபியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு: சார் ஆட்சியரிடம் வணிகர்கள் மனு
கோபி சார் ஆட்சியர் சிவனாந்தனிடம் வணிகர்கள் கோரிக்கை மனு அளித்த போது எடுத்த படம்.
கோபிசெட்டிபாளையத்தில் அனைத்து வணிகர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மத்திய, மாநில அரசுகள் வியாபாரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது பல்வேறு புதிய வரிவிதிப்பு முறையினை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதுமுள்ள வியாபாரிகள் பல்வேறு நகரங்களில் கடைகளை அடைத்து தங்களின் கோரிக்கைகளை அரசுக்கு தெரிவித்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அனைத்து வணிகர் சங்கம் சார்பில், இன்று (ஜன.3) வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில், 3 ஆயிரத்திற்கும் அதிகமான வணிகர்கள் தங்களின் கடைகளை அடைத்து புதிய வரிவிதிப்பு முறையை கைவிடக்கோரி கோபி துணை ஆட்சியர் சிவனாந்தம் மற்றும் கோபி நகராட்சி ஆணையாளர் சுபாஷினி ஆகியோரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
இதனால், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், இந்த கடையடைப்பு போராட்டம் காரணமாக ரூ,50 கோடி வர்த்தகம் முடங்கியது. அதேசமயம், வழக்கம்போல் மருந்தகங்கள், மருத்துவமனைகள், பால் கடைகள் செயல்பட்டன. பேருந்துகள் வழக்கம் போல் இயங்கியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu