சென்னிமலை பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

சென்னிமலை பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
X

 பைல் படம்.

சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதனால் சென்னிமலை நகர் பகுதி முழுவதும், பூங்கா நகர், பாரதி நகர், சின்னபிடாரியூர், ஊத்துக்குளிரோடு, ஈங்கூர் ரோடு, குமரபுரி, சக்தி நகர், பெரியார் நகர், நாமக்கல்பாளையம், அரச்சலூர் ரோடு, குப்பிச்சிபாளையம், திப்பம்பாளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், ராமலிங்கபுரம், ஓரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலைபாளையம், வெப்பிலி, மு.பு.வலசு, பசுவப் பட்டி, முருங்கத்தொழுவு மற்றும் ஆர்.கே.நகர் ஆகிய அனைத்து பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
future of ai in retail