எனக்கு கொரோனா சார்... போலீசுக்கே டிமிக்கி தரும் வாகன ஓட்டிகள்!

எனக்கு கொரோனா சார்... போலீசுக்கே டிமிக்கி தரும் வாகன ஓட்டிகள்!
X

ஈரோட்டில், ஊரடங்கு விதிகளை மீறி வரும் வாகன ஓட்டிகளை விசாரிக்கும் காவல்த்துறையினர்.

ஈரோட்டில், போலீசார் வாகன சோதனை மேற்கொள்ளும் போது, தங்களுக்கு கொரோனா இருப்பதாகக்கூறி, போலீசாருக்கு வாகன ஓட்டிகள் டிமிக்கி கொடுப்பது அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த, ஜூன் 7-ஆம் தேதி வரை, தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட எல்லையில் உள்ள, 13 நிலையான சோதனைச்சாவடிகளிலும், 42 தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எல்லைப் பகுதிகள் சீல் வைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும் முழு ஊரடங்கை பொருட்படுத்தாமல் வழக்கம்போல், இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் ஏராளமானோர் சுற்றி திரிகின்றனர். அவர்களின் வாகனங்களை தடுத்து நிறுத்தி விசாரிக்கும் போலீசார், தேவையின்றி சுற்றித் திரிந்தால், பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.

எனினும், வெளியே சுற்றும் வாகன ஓட்டிகளில் பெரும்பாலானோர் மருந்துக்கடை, மருத்துவமனை, கொரோனா பரிசோதனை என மருத்துவம் சார்ந்த காரணங்களை கூறுவதால், அவர்களை தடுக்க முடியாமல் போலீசார் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதேபோல் வாகனச்சோதனையில் மாட்டுகின்ற ஒருசிலர் தனக்கு கொரோனா பாசிட்டிவ் உள்ளதாகவும் கூறி, போலீசாரையே மிரள வைக்கின்றனர். வேறுவழியின்றி, போலீசாரும் அவர்களை விட்டுவிட வேண்டிய சூழலில் உள்ளனர்.

எனவே பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து கொரோனா கட்டுபாடுகளை மதித்து, அத்தியாவசிய தேவையின்றி வெளியே வராமல் வீட்டிலேயே இருந்தால் மட்டுமே, மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப முடியும் என்பதை உணரவேண்டும்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil