ஈரோடு அருகே லஞ்சம் வாங்கிய வீஏஓ கைது

ஈரோடு அருகே லஞ்சம் வாங்கிய வீஏஓ கைது
X

வடுகபட்டி அ,  கிராம நிர்வாக அலுவலகம்.

ஈரேடு அருகே பட்டா மாறுதலுக்காக 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா அஞ்சூர் அடுத்த குழந்தைபாளையம் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் (30). இவர் ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ள வடுகபட்டி அ, கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், அரச்சலூர் அடுத்த வடுகப்பட்டி, வடக்கு வீதியை சேர்ந்த புவனேஸ்வரி (35)-ன் கணவர் குமார் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதன் காரணமாக வடுகபட்டியில் உள்ள வீட்டை பட்டா மாறுதல் செய்வதற்காக புவனேஷ்வரி கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேலை அணுகியுள்ளார்.

அப்போது வெற்றிவேல் புவனேஸ்வரியிடம் பட்டா மாறுதல் செய்து தருவதற்கு 40 ஆயிரம் ரூபாய் பணம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதில் பேரம் பேசி இறுதியாக ரூ.30 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து ரூ.19 ஆயிரம் ரூபாய் கொடுத்த நிலையில் மீதித் தொகையை கேட்டு அடிக்கடி புவனேஷ்வரியை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புவனேஸ்வரி புகார் அளித்தார். இதனையடுத்து, புவனேஸ்வரி 10 ஆயிரம் ரூபாய் பணத்தை விஏஒ., வெற்றிவேலிடம் கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விஏஓ., வெற்றிவேலை கையும் களவுமாக பிடித்தனர்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் இரவு வரை வெற்றிவேலிடம் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், லஞ்சம் வாங்கிய குற்றத்திற்க்காக கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேலை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!