காவிரி ஆற்றில் மூழ்கி கேரளாவை சேர்ந்த 2 வாலிபர்கள் பலி
பைல் படம்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த முகாசிபிடாரியூர், 1010காலனியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் நரேந்திரன் (25), சென்னையிலுள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். விநாயகர் சதுர்த்தியையொட்டி விடுமுறை தினம் என்பதால் நரேந்திரனை பார்ப்பதற்காக இவரது நண்பர்களான கேரள மாநிலம், பந்தளம் திட்டா மாவட்டம், திருவல்லா பகுதியைச் சேர்ந்த கிரன் பாபு (23), கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், பொன்னானி பகுதியைச் சேர்ந்த எது (22), கேரள மாநிலம் கோட்டயம் அடுத்த நத்தகாவுங்கள் பகுதியைச் சேர்ந்த விஷ்ணுபிரசாத் (28), கேரளாவைச் சேர்ந்த கௌதம் (24), சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த அசோக் (29), திருப்பூர் மாவட்டம் நத்தகாடையூரைச் சேர்ந்த விஜயகுமார் (25) தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் (31) ஆகிய எழு பேர் வந்துள்ளனர். இதனையடுத்து இவர்கள் ஏழு பேருடன் சேர்த்து நரேந்திரன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த உதயமூர்த்தி (28) என 9 பேர் இரண்டு கார்களில் கொடுமுடி அருகே உள்ள காரணம்பாளையம் காவிரி ஆற்றின் அணைக்கட்டுக்கு வந்துள்ளனர்.
பின்னர் காரணம்பாளையம் அணைக்கட்டு பகுதியை சுற்றிப் பார்த்து விட்டு மது அருந்தியுள்ளனர். இதனையடுத்து அனைவரும் காவிரியாற்றில் குளித்துள்ளனர். அப்போது கிரண் பாபு, எது ஆகிய இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி அடித்து சென்றுள்ளது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் காப்பாற்றும்படி சத்தம் போடவே அருகில் இருந்த மீனவர்கள் நீரில் மூழ்கிய இருவரையும் போராடி மீடட்டு கரைக்கு கொண்டு வந்தனர். எனினும் இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்த மலையம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu