அரச்சலூரில் புளியமரத்தில் மோதி கார் விபத்து: இருவர் பலி

அரச்சலூரில் புளியமரத்தில் மோதி கார் விபத்து:  இருவர் பலி
X

விபத்துக்குள்ளான கார்.

அரச்சலூர் அருகே புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.

திருப்பூர் மாவட்டம் பழைய கோட்டை அடுத்த பெரிய தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (25), எலக்ட்ரிஷன். திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் பாப்பாகாடு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (23) மெக்கானிக். இவர்கள் இருவரும் காரில் ஈரோட்டுக்கு சென்று விட்டு வேலையை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை நத்தகாடையூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை பூபதி ஓட்டி வந்துள்ளார். கார் அரச்சலூர் அடுத்த கண்ணம்மாபுரம் அருகே வரும்போது ரோட்டின் ஓரத்தில் இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் முன் பக்கம் முழுவதும் சேதமடைந்தது. காரில் இருந்த இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரச்சலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தகவல் அறிந்த ஏஎஸ்பி., கௌதம் கோயல், அரச்சலூர் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் நேரில் சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து அரச்சலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story