திருப்பூர் குமரன் 118வது பிறந்த நாள் விழா : அனைத்து கட்சி சார்பில் மரியாதை

திருப்பூர் குமரன் 118வது பிறந்த நாள் விழா : அனைத்து கட்சி சார்பில்  மரியாதை
X

பாஜக மணிலா தலைவர் அண்ணாமலை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரனின் 118வது பிறந்த நாள் விழாவில் அனைத்து கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள சிவகிரியில் சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரன் 118 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ,மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா, புதிய திராவிட கழகத்தின் நிறுவனர் ராஜ் கவுண்டர், நாம் தமிழர் கட்சியினர், மக்கள் நீதி மையம் கட்சியினர் ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story
ai marketing future