சிவகிரி அருகே கோவிலில் சிலைகளை பிரதிஷ்டை செய்யும் இடத்தில் நல்லபாம்பு

சிவகிரி அருகே  கோவிலில் சிலைகளை பிரதிஷ்டை செய்யும் இடத்தில் நல்லபாம்பு
X

சிவகிரி அருகே திருப்பணி நடைபெறும் கன்னிமார் கோவிலில் சிலைகளை பிரதிஷ்டை செய்யும் இடத்தை கடந்து சென்ற  நல்லபாம்பு

சிவகிரி அருகே திருப்பணி நடைபெறும் கோவிலில் சிலைகளை பிரதிஷ்டை செய்யும் இடத்தில் நல்லபாம்பு இருந்ததால் பக்தர்கள் பரவசம்

சிவகிரி அருகே பரபரப்பு திருப்பணி நடைபெறும் கோவிலில் சிலைகளை பிரதிஷ்டை செய்யும் இடத்தை நல்லபாம்பு அடையாளம் காட்டியதால் பக்தர்கள் பரவசம்.

சிவகிரி பேரூராட்சிக்குட்பட்ட ரங்கசமுத்திரம் பகுதியில் கன்னிமார்,கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. முன்னோர்கள் வழிபட்ட பழமைவாய்ந்த இக்கோவிலை அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் முற்றிலுமாக புதுப்பித்து திருப்பணி வேலைகளை செய்து வருகின்றனர். வருகிற மார்ச் மாதம் கும்பாபிசேகம் நடத்த திட்டமிட்டு அதற்கான ஆயத்த பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோவிலை ஆகமமுறைப்படி அமைத்துவருகின்றனர், கோவிலில் வழிபடக்கூடிய ஏழு கன்னிமார்கள் சுவாமி சிலைகளை ஒரே இடத்தில் வரிசையாக பீடம் அமைத்து பிரதிஷ்டை செய்யக்கூடிய இடங்களை, நேற்று முன்தினம் தேர்வு செய்து சுவற்றில் அடையாளப்படுத்தி கோடுகள் வரைந்துள்ளார். வழக்கம்போல கோவில் கட்டுமான திருப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தனர் மாலை 5.30 மணியளவில் சுமார் 10 அடி நீளமுள்ள நல்லபாம்பு ( நாக பாம்பு) ஒன்று சர சர வென ஊர்ந்து வந்து ஏழு கன்னிமார் சிலைகளையும் பிரதிஷ்டை செய்ய சுவர்களில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஏழு கட்டங்களிலும் வரிசையாக 3 அடி உயரம்வரை சுவற்றில் ஊர்ந்து பின் திரும்பி, அடுத்த கட்டத்தில் சுமார் 3 அடி உயரம் வரை எழும்பி ஊர்ந்து பின்திரும்பி, மறுபடியும் அடுத்த கட்டத்திற்கு தானாகவே மாறியுள்ளது.

வேலைசெய்யும் ஆட்கள், அருகில், உள்ள குடியிருப்பு வாசிகள் சூழ்ந்து நின்று பக்தி பரவசத்துடன் வேடிக்கை பார்ப்பதை கொஞ்சம் கூட பாம்பு கண்டுகொள்ளாமல் கன்னிமார் சுவாமி சிலைகளை பிரதிஷ்டை செய்யும் ஏழு கட்டங்களிலும் ஒரே அளவு உயரம் வரை நல்லபாம்பு ஏறி இறங்கியதை அங்கு வேலை பார்த்த வேலை ஆட்கள் தங்களது செல்போனில் இந்த நிகழ்வை வீடியோவாக படம் பிடித்தனர். அங்கிருந்தவர்கள் மெய்சிலிர்த்து நாகாத்தம்மா…நாகாத்தம்மா …என்று கையெடுத்து கும்பிட்டனர். மேலும் வேலை செய்யவேண்டும் போய்வா என்று பக்தி பரவசத்துடன் கூறவே, நல்லபாம்பு அருகிலிருந்த விவசாய நிலத்தில் ஊர்ந்து சென்று மறைந்து விட்டது.

பரம்பரை பரம்பரையாக எங்கள் முன்னோர்கள் வழிபட்ட கோவிலில் அடிக்கடி பாம்பு வரும். தற்போது திருப்பணி நடைபெற்று வரும் கோவிலில்எந்த இடத்தில் கன்னிமார்சுவாமி சிலைகளை பிரதிஷ்டை செய்ய போகும் இடத்தில் நல்லபாம்பு வந்து வந்து சென்றது எங்களுக்கு மிகுந்த ஆச்சரியமாக உள்ளது என்று அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் தெரிவித்தனர். சுவாமி சிலைகள் அமைய உள்ள இடத்தில் நல்லபாம்பு வந்து சென்றது அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் பாம்பு கோவிலுக்குள் வந்த சென்றதை அங்கிருந்தவர்கள் வீடியோ பிடித்து சமூக வலைத்தளத்தில் அனுப்பவே சிவகிரி மற்றும் சுற்றுப்பகுதியில் இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!