ரூ.2.31லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்

தமிழக அரசால் தடைசெய்யப்பட்டரூ.2 .31லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை மொடக்குறிச்சி போலீசார் வாகனத்துடன் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி மஞ்சக்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் டாட்டா ஏசி வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் போதைவஸ்து புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக கொண்டு சென்றார்.

அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் வாகனத்தை சோதனை செய்தனர். அதில் ரூ.2 லட்சத்து 31 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருபு்பதது கண்டுபு் பிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து வேலுச்சாமி கைது செய்தனர்.

மேலும் இந்த புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த ஈரோடு மஜித் வீதியைச் சேர்ந்த ஜுபையா, ஈரோடு கொல்லம்பாளையத்தைச் சேர்ந்த ஹனிபா, ஈரோடு சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்த அப்துல், ஈரோடு திருநகர் காலனியைச் சேர்ந்த வெங்கடேஷ் ஆகிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!