காவலர்களுக்கு துறை சார்பில் வாகனங்கள் வழங்கப்பட்டது

காவலர்களுக்கு துறை சார்பில் வாகனங்கள் வழங்கப்பட்டது
X

ஈரோடு மாவட்ட எஸ்.பி தங்கதுரை காவலர்களுக்கு வாகன சாவியை அளிக்கிறார்

தமிழக காவல்துறை சார்பில் ஈரோட்டில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண் போலீசார்களுக்கு 31 இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது.

தமிழக காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றத்தை தடுக்க சம்பவ இடத்திற்கு சென்று விரைவில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வசதியாக பெண்களுக்கென ஹோண்டா ஆக்டிவா வண்டியும், சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றச்சம்பவங்களின் போது குற்றவாளிகளை விரைந்து சென்று குற்றவாளிகளை பிடிக்க ஆண்களுக்கு ஹோண்டா யுனிகான் பைக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஈரோடு மாவட்டத்திற்கு ஹோண்டா ஆக்டிவா 24 வண்டிகளும், ஹோண்டா யுனிகான் பைக் 7-ம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்ட எஸ்.பி தங்கதுரை தலைமையில் மாவட்ட கூடுதல் எஸ்.பி.கனகேஸ்வரி முன்னிலையில் போலீசாருக்கு வண்டிகள் வழங்கும் நிகழச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் மூலம் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள 24 ஹோண்டா ஆக்டிவா வண்டிகளை மாவட்டத்தின் உட்கோட்டங்களில் பணிபுரியும் பெண் இன்ஸ்பெக்டருக்கு ஒரு வண்டியும், பெண் எஸ்.ஐ களுக்கு 5 வண்டிகளும், பெண் போலீசுக்கு 18 வண்டிகளும் பிரித்து வழங்கப்பட்டது. அதேபோல் ஆண் எஸ்.ஐ.களுக்கு 7 ஹோண்டா யுனிகான் பைக் வண்டிகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story
the future of ai in healthcare