ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102: வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி

ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102: வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி
X
ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 31 பைசா உயர்ந்து ரூ.102.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டத்தையடுத்து சில மாதங்கள் வரை பெட்ரோல் ,டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயரத் தொடங்கியது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101 தாண்டியது. தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102-ஐ தாண்டியது.

ஈரோட்டில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.94-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று மேலும் 31 பைசா உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதைப்போல் டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு லிட்டர் டீசல் ரூ.94.73-க்கு விற்பனையானது.இன்று மேலும் 25 பைசா அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் ரூ.94.98-க்கு விற்பனையானது.

ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102-ஐ தாண்டி உள்ளதால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மற்ற பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளது. எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!