கொட்டும் மழையில் பேருந்துக்குள் குடைபிடித்து பயணிக்கும் பயணிகள்

கொட்டும் மழையில் பேருந்துக்குள் குடைபிடித்து பயணிக்கும்  பயணிகள்
X

கோப்பு படம் 

கொட்டும் மழையில் பேருந்துக்குள் குடைபிடித்து பயணிக்கும் பயணிகள்

ஈரோட்டில் இருந்து கொடுமுடி வரை 43 நம்பர் நகரப் பேருந்து செல்கிறது. இந்தப் பேருந்து காலை 7 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்பட்டு 8 : 15 மணிக்கு கொடுமுடி சென்றடைகிறது. திரும்பவும் 8 : 20 மணிக்கு கொடுமுடியில் இருந்து புறப்பட்டு 9:30 மணிக்கு ஈரோடு செல்கிறது.


காலை நேரத்தில் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளும் வேலைக்கு செல்லும் பெண்களும் மற்றும் பணிக்குச் செல்லும் ஆண்களும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இப்பேருந்து பயணிப்பது வழக்கம்.

தற்போது அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது. பேருந்தில் பயணிக்கும் பயணிகள் ஏறும்போது, பேருந்து முழுவதும் சேதம் அடைந்து மழைநீர் பேருந்துகள் கொட்டுவதால் பயணிகள் இருக்கையில் அமராமல் நின்று கொண்டு செல்லும் அவல நிலையும், மேலும் அமர்ந்து செல்லும் பயணிகள் கொட்டும் மழையில் நனையாமல் பேருந்துக்குள் குடை பிடித்து பயணிக்கும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது .

இப்பேருந்தை சரி செய்து மக்களின் பயன்பாட்டிற்கு நல்ல பேருந்து விட தமிழக அரசுக்கு பயணிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள் .

Tags

Next Story
ai automation in agriculture