அரசியல் அமைப்பை திருத்தியர் மோடி: மத்திய இணை அமைச்சர் முருகன்

அரசியல் அமைப்பை திருத்தியர் மோடி: மத்திய இணை அமைச்சர் முருகன்
X

ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் ஆசி யாத்ராவில் பேசிய எல். முருகன்.

OBC பட்டியலில் எந்தெந்த ஜாதி இடம் பெற வேண்டும் என அரசியல் அமைப்பை திருத்தி சமூக நீதியை நிலை நாட்டியவர் பிரதமர் மோடி.

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகேயுள்ள நல்லமங்காபாளையத்தில் சுதந்திர போராட்ட வீரர் பொல்லானின் திருவுருவபடத்திற்கு மத்திய தகவல் ஒளிப்பரப்புத்துறை இணையமைச்சர் முருகன் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொல்லான் குறித்த புத்தகைத்தையும் வெளியிட்டார். பின்னர் அரச்சலூர் கைகாட்டி சந்திப்பில் மக்கள் ஆசி பெறும் யாத்திராவு நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு பா.ஜ.க எம்எல்ஏ டாக்டர் சரஸ்வதி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து வரவேற்பு விழாவில் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், இந்திய அரசு ஏகலைவன் பெயரில் ராணுவ பயிற்சி பள்ளியை ஆரம்பித்துள்ளது . சுதந்திரம் பெற்ற பிறகு 12 தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தவர் பிரதமர் மோடி என்றும் , இவர்களை அறிமுகப்படுத்த கூடாது என்பதால் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதாக தெரிவித்தார். மத்திய அரசு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்த எல்.முருகன் , OBC பட்டியலில் எந்தெந்த ஜாதி இடம்பெற வேண்டும் என அரசியல் அமைப்பை திருத்தி சமூக நீதியை நிலை நாட்டியவர் பிரதமர் மோடி என்றார். நீங்கள் என்னை வாழ்த்தி அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக இவ்விழாவில் பேசிய பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை, வேல் யாத்திரையின் போது தமிழகத்தில் பா.ஜ.க வெற்றி பெறாது என திமுக கூறி வந்த நிலையில் மொடக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. திமுக பொய்யான சமூகநீதியை வலியுறுத்தி வருவதாகவும் , பா.ஜ.க தான் உண்மையான சமூகநீதியை வலியுறுத்து வருவதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஈரோடு செல்லும் வழியில் நின்றிருந்த பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற இணை அமைச்சர், அங்கிருந்த ரேசன்கடையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த அரிசி , பருப்பு ஆகியவற்றின் தரம் குறித்தும் மத்திய அரசின் திட்டத்தில் இலவச அரசி வழங்கி வருவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

Tags

Next Story
ai solutions for small business