முன்கள பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி வழங்கினார்

முன்கள பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி வழங்கினார்
X
முன்கள பணியாளர்களுக்கு உதவும் வகையில் 5 கிலோ அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களை மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ டாக்டர்.சரஸ்வதி வழங்கினார்.

ஈரோடு மாவட்டத்தில் அதிகரித்துள்ள கொரானா தாக்கம் காரணமாக தளர்வுகளுடனான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பலரும் தங்களது வாழ்வாதாரம் இழந்து மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பாஜக எம்எல்ஏ டாக்டர்.சரஸ்வதி பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக கொரோனோ காலத்திலும் எந்தவித தயக்கமும் இன்றி பணியாற்றி வரும் முன்கள பணியாளர்களுக்கு உதவிடும் வகையில் 5 கிலோ அரிசி அடங்கிய அத்தியாவசியப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ டாக்டர்.சரஸ்வதி கலந்து கொண்டு மருத்துவர்கள் ,செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என 500 க்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்களுக்கு பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி ஒன்றிய தலைவர் கணபதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்