முன்களப்பணியாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கிய மொடக்குறிச்சி எம்.எல்.ஏ.

முன்களப்பணியாளர்களுக்கு  நிவாரண உதவி வழங்கிய மொடக்குறிச்சி எம்.எல்.ஏ.
X
மொடக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளின் முன்கள பணியாளர்களுக்கு 5 கிலோ அரிசியை,மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.கே.சரஸ்வதி வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 46 புதூர், லக்காபுரம், முத்துக்கவுண்டன்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, ஆனந்தம்பாளையம், புஞ்சை காலமங்கலம், நஞ்சை காலமங்கலம், கணபதிபாளையம், ஈஞ்சம்பள்ளி, பழமங்கலம், குலவிளக்கு, விளக்கேத்தி, காகம் ஆகிய கிராம ஊராட்சிகளின் முன்கள பணியாளர்களுக்கு, மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.கே.சரஸ்வதி, கொரோனா கால உதவிகளை வழங்கினார்.

அதன்படி, முன்கள பணியாளர்களுக்கு 5 கிலோ அரிசியை கொரோனா நிவாரணமாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பாஜக மாநில பிற்படுத்தப்பட்டோர் அணியின் துணைத்தலைவர் கலைச்செல்வன், மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் வேதாந்தம், மாவட்ட பொதுச்செயலாளர் பி. ஈஸ்வரமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!