இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் முத்துசாமி

இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட  உதவிகளை வழங்கிய அமைச்சர் முத்துசாமி
X

நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் முத்துசாமி.

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு அமைச்சர் முத்துசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம், அறச்சலூர் மற்றும் ஈஞ்சம்பள்ளி ஆகிய இரண்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 1,333 இலங்கை தமிழர்களுக்கு ரூ.13.4 லட்சம் மதிப்பிலான துணிகள், பாத்திரங்கள் மற்றும் எரிவாயு இணைப்புகளை வழங்கினார். மேலும் சத்தியமங்கலம் வட்டம், பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 3,152 இலங்கை தமிழர்களுக்கு ரூ.24.17 லட்சம் மதிப்பீட்டில் துணிகள், 1,050 குடும்பங்களுக்கு ரூ.13,49,250 மதிப்பிலான பாத்திரங்களும், 155 குடும்பங்களுக்கு ரூ.5,89,155 மதிப்பிலான எரிவாயு இணைப்புகள் என மொத்தம் 4,357 பயனாளிகளுக்கு ரூ.43,55,405 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மாவட்டம் முழுவதும் மூன்று முகாம்களை சேர்ந்து 5,790 பயனாளிகளுக்கு ரூ.56.97 லட்சம் மதிப்பிலான துணிகள், பாத்திரங்கள் மற்றும் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படவுள்ளது என வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!