எம்ஜிஆரின் 105வது பிறந்தநாள்: மொடக்குறிச்சியில் கொண்டாடப்பட்டது

எம்ஜிஆரின் 105வது பிறந்தநாள்: மொடக்குறிச்சியில்  கொண்டாடப்பட்டது
X

எம்ஜிஆரின் 105வது பிறந்த நாளையொட்டி பல்வேறு இடங்களில் கொடிகளை ஏற்றி அன்னதானம் வழங்கப்பட்டது.

எம்ஜிஆரின் 105வது பிறந்த நாளையொட்டி மொடக்குறிச்சியில் பல்வேறு இடங்களில் கொடிகளை ஏற்றி அன்னதானம் வழங்கப்பட்டது.

அதிமுக நிறுவனரும் முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 105வது பிறந்த நாளையொட்டி அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சிவசுப்பிரமணி தலைமையில் மொடக்குறிச்சி தொகுதியில் கொண்டாடப்பட்டது.

மொடக்குறிச்சி தொகுதியில் அவல்பூந்துறை, அரச்சலூர், எழுமாத்தூர், சின்னியம்பாளையம், கொடுமுடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்சி கொடிகளை ஏற்றி வைத்து கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயணப் பெருமாள் கோயிலில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!