ரயில்வே நுழைவு பாலத்தின் தடுப்பு கம்பியில் மோதி நின்ற லாரி

ரயில்வே நுழைவு பாலத்தின் தடுப்பு கம்பியில் மோதி நின்ற லாரி
X

வெண்டிபாளையம் பாலத்தில் சிக்கிக் கொண்ட லாரி.

வெண்டிபாளையம் அருகே ரயில்வே நுழைவு பாலத்தின் தடுப்பு கம்பியில் லாரி மோதி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு.

ஈரோடு வெண்டிபாளையம் அருகே ரயில்வே தண்டவாளத்தை வாகனங்கள் கடந்து செல்ல நுழைவு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவு பாலத்தில் இலகு ரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, பாலத்தின் முன்பாக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டை பகுதியில் இருந்து பேப்பர் பாரம் ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் செல்வதற்காக வெண்டிபாளையம் பேரேஜ் வழியாக லாரி ஒன்று வந்தது. லாரியின் டிரைவர், வெண்டிபாளையம் பழைய ரயில்வே நுழைவு பாலத்தில் தடுப்புகளை மீறி லாரியை ஓட்டி சென்றுள்ளார். அப்போது லாரியின் பின்புறம் ஏற்றப்பட்டிருந்த பாரம் தடுப்பு கம்பியல் மோதி, பாலத்தின் குறுக்கே லாரி நின்றது. இதனால், தடுப்பு கம்பி இடிந்து சாலையில் விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், லாரியை கிரேன் வாகனம் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் 4 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!