ஈரோடு: ஐ.டி ஊழியர் எனக்கூறி நகை, பணம் பறித்தவர் கைது

ஈரோடு: ஐ.டி ஊழியர் எனக்கூறி நகை, பணம் பறித்தவர் கைது
X

ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் தனியாக நடந்து செல்பவர்களிடம் ஐ.டி ஊழியர் எனக்கூறி நகை பணம் பறித்த நபர் கைது செய்தனர்

ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் தனியாக நடந்து செல்பவர்களிடம் ஐ.டி ஊழியர் எனக்கூறி நகை, பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டனர்.

சோலார் மற்றும் மொடக்குறிச்சி பகுதியில் தனியாக செல்பவர்களை குறிவைத்து மர்ம நபர் ஐடி ஊழியர் எனக்கூறி 1லட்சம் மற்றும் 1 1/2 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் திருப்பூரை சேர்ந்த அப்துல் சலீம் என்பவரை கைது செய்து 75ஆயிரம் ரொக்கம் மற்றும் 1 1/2 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இவர் மீது திருப்பூரில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் அப்துல் சலீமை சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!