மது அருந்த பணம் கேட்டு பாட்டியை கொன்ற பேரன் கைது
ஈராேடு மாவட்டத்தில் மது அருந்த பணம் கிடைக்காததால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது பாட்டியை கொன்ற மனநலம் பாதிக்கப்பட்ட பேரனை அரச்சலூர் போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை பாரதி வீதியைச் சேர்ந்தவர் முத்துசாமி, இவரது மனைவி ஜெல்லின் மேரி. இவர்களுக்கு பாரதி வெண்ணிலா என்ற மகளும் , பூவிழி செல்வன் என்ற மகனும் உள்ளனர். பாரதி வெண்ணிலாவுக்கு திருமணமாகி பாரதி வீதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். பூவிழி செல்வன் மனைவி ஷர்மிளா மகள் அக்ஷதா ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் பூவிழி செல்வனுக்கு கடந்த 2 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் பூவிழி செல்வன் கோவையில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மது குடித்து விட்டு மாமனார், மாமியாரிடம் தகராறில் ஈடுபட்டதால் அவர்கள் பூவிழி செல்வனை அடித்து விரட்டி உள்ளனர். பின்னர் கோவையிலிருந்த அவல்பூந்துறைக்கு நள்ளிரவு வந்து வீட்டில் இருந்த தனது தாய் ஜெலின்மேரியிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதில் பணம் தர மறுத்த அவரது தாய் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.
இதனால் செய்வதறியாது கோபமடைந்த பூவிழி செல்வன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 95 வயதான தனது பாட்டி காளியம்மாளை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் காளியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து தகவலறிந்த அரச்சலூர் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பூவிழி செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu