விவசாயிகளை காப்பது முதல் பணி திமுக துணை பொதுச்செயலாளர்

விவசாயிகளை காப்பது  முதல் பணி    திமுக துணை பொதுச்செயலாளர்
X
மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரும், திமுக துணை பொது செயலாளருமான சுப்புலட்சுமி ஜெகதீசன் மொடக்குறிச்சி தொகுதி தேர்தல் அலுவலர் ஜெயராணியிடம் தனது வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மொடக்குறிச்சி தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. என்னை எதிர்த்து பா.ஜ.க போட்டியிடுகிறது. அதிமுகவினருக்கு இந்த தொகுதியில் இடம் ஒதுக்க வில்லையே என்ற வருத்தம் உள்ளது.

மொடக்குறிச்சி தொகுதி முழுவதும் விவசாயிகள் நிறைந்த பகுதி. தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களிலிருந்து விவசாயிகளை காப்பது தனது முதல் பணி என்றார்.

வேட்பு மனு தாக்கலின் போது திமுக நெசவாளர் அணி மாநில செயலாளர் சச்சிதானந்தம், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் .பிரகாஷ், மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன் , கதிர்வேல், நகர செயலாளர் சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்