'கம்பு ஊன்றியாவது கடமையை செய்வோம்': வாக்களிப்பதில் முதியோர் ஆர்வம்

கம்பு ஊன்றியாவது கடமையை செய்வோம்:  வாக்களிப்பதில்  முதியோர் ஆர்வம்
X
முதியவர்கள் ஆர்வத்தோடு வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரடியாகச் சென்று வாக்களித்தனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.அதன் ஒருபகுதியாக ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதியில் உள்ள 2741 வாக்குச்சாவடி மையங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். குறிப்பாக முதியவர்கள் தள்ளாத வயதிலும் தனியாளாக வந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். இன்னும் சில இடங்களில் வயதான மூதாட்டிகள் ஊன்றுகோல் உதவியுடன் தங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்து வாக்களித்தனர். அவர்களுக்கு தேவையான வசதிகளை வாக்குச்சாவடி மையங்களில் அதிகாரிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது