ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல்

ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல்
X

ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட அரச்சலூரில் பறக்கும் படை அலுவலர் சிவகுமார் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் . அப்போது திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த சின்னாய்புதூர் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி என்பவர் காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.2 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மொடக்குறிச்சி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் சங்கர் கணேஷிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!