சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 216வது நினைவு நாள் அனுசரிப்பு

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 216வது நினைவு நாள் அனுசரிப்பு
X

தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செலுத்திய மொடக்குறிச்சி எம்எல்ஏ., டாக்டர் சி.சரஸ்வதி.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி, திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 216 வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவர் சொந்த ஊரானா அரச்சலூர் அடுத்த ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் அரசின் சார்பில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுன்னி தலைமை தாங்கினார். அரசு கேபிள் டிவி தலைவர் குறிஞ்சி சிவகுமார், அந்தியூர் எம்எல்ஏ., வெங்கடாசலம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, திமுக மாநில துணைப் பொதுச் செயலாளரும் எம்.பி.,யுமான அந்தியூர் செல்வராஜ் , ஈரோடு எம்பி கணேசமூர்த்தி, பாஜ., கட்சியின் சார்பில் மொடக்குறிச்சி எம்எல்ஏ., டாக்டர் சி.சரஸ்வதி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தனார்.

நினைவு தினத்தை முன்னிட்டு ஓடாநிலை கிராமத்திலும், அந்தப் பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags

Next Story
ai marketing future