தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஆய்வு

தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில்  தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஆய்வு
X
மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஆய்வு.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலை வேகமாக பரவி வருகிறது.தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறையினர், போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். முதலில் ஈரோடு நகரப்பகுதியில் வேகமாக பரவி வந்த தொற்று தற்போது கிராமப்புற பகுதியில் குடும்பம் குடும்பமாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 கிராம ஊராட்சிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கிராம செயலாளர்கள், சுகாதாரத் துறையினர், போலீசார், தன்னார்வலர்கள் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. நூறு வீடுகளுக்கு ஒரு பொறுப்பாளர் என்ற அடிப்படையில் இவர்கள் நியமிக்கப்பட்டு வீடு வீடாகச் சென்று சளி காய்ச்சல் உள்ளதா என கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், சின்னியம்பாளையம்,காந்திநகர்,ஏடி காலனி ஆகிய பகுதிக்குட்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் கதிரவன் ஆய்வு மேற்கொண்டார். மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களின் வீடுகளுக்கு சென்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்குமாறு மருத்துவ பணியாளர்கள், அலுவலர்கள்,தன்னார்வலர்கள் ஆகியோருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து மொடக்குறிச்சி, சஞ்சை நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாகன தனிக்கையில் ஈடுபட்டார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!