மொடக்குறிச்சியில் மதுப் பிரியர்களால் ம.நீ.ம. கட்சி பிரசாரத்தில் சலசலப்பு

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பிரசாரம் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரை மதுப் பிரியர்கள் உள்ளே விட மறுத்து தகராறில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளராக ஆனந்தம் ராஜேஷ் போட்டியிடுகிறார். ஆனந்தம் ராஜேஷ் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்றிரவு சிவகிரி அம்மன் கோயில் வீதியில் தனது ஆதரவாளர்களுடன் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் நீதி மையம் வேட்பாளர் ஆனந்தம் ராஜேஷ். அங்கு மது அருந்தி வந்த இரு இளைஞர்கள் இங்கு நீங்கள் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என தடுத்து தகராறில் ஈடுபட்டனர்.

இதனால் மக்கள் நீதி மையத்தினருக்கும் அந்த இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் சமாதானம் செய்து மதுப் பிரியர்கள்களை அஙகிருந்து அப்புறப்படுத்தினர்.

Tags

Next Story
ai healthcare technology